/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி வளாகத்தில் மாடுகள் கட்டி அட்டகாசம்
/
அரசு பள்ளி வளாகத்தில் மாடுகள் கட்டி அட்டகாசம்
ADDED : ஜூன் 14, 2025 07:03 AM

அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாடுகள் கட்டி அட்டகாசம் செய்வர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வில்லியனுார் சாலை, முருங்கப்பாக்கத்தில் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் சுற்றுச் சுவர் சேதமடைந்துள்ளது. பள்ளி கேட் பராமரிப்பு இல்லாமல், இருப்பதால், அருகே குடியிருப்பவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் மாடுகளை கட்டி வருகின்றனர். மாடுகளின் கழிவுகளை பள்ளி வளாகத்தில் கொட்டி உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. அதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள் முளைந்து இருப்பதால், மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில், விளையாட முடியாத நிலை இருக்கிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக, மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.
பள்ளி வளாகத்தில் மாடுகளை கட்ட வேண்டாம் என, மாட்டின் உரியைாளரிடம், தலைமை ஆசிரியர் தெரிவித்தற்கு, அந்த நபர் தலைமை ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசி, மாடுகளை கட்டி வருகிறார். பல மாதங்களாக பள்ளி வளாகத்தில் மாடுகள் கட்டி, அதன் கழிவுகளை அங்கேயே போட்டுள்ள அந்த நபர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.