தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ் டிரைவர்கள் போராட்டம்

 பஸ் டிரைவர்கள் போராட்டம்

 பஸ் டிரைவர்கள் போராட்டம்


ADDED : ஜூன் 27, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஊதிய உயர்வு கோரி இ-பஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்தம் செய்து இ-பஸ்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள இ-பஸ் பணிமனையில் நேற்று முன்தினம் இரவு ஊதிய உயர்வு வேண்டி டிரைவர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்றும் பஸ்களை இயக்காமல், 60 டிரைவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி, மத்திய அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கையை வைத்து கோஷங்களை எழுப்பினர்.

பெரும்பாலும் இந்த இ-பஸ்களால் நகரப்புறத்தைவிட, கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். இ- பஸ்கள் இயங்கப்படாததால் கிரமாப்புற மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us