/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்சில் தீ: 13 பேர் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்
/
பஸ்சில் தீ: 13 பேர் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்
பஸ்சில் தீ: 13 பேர் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்
பஸ்சில் தீ: 13 பேர் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்
ADDED : ஜன 13, 2026 04:50 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் சென்ற ஆம்னி பஸ்சில் இருந்து புகை வருவதை கவனித்து ஆட்டோ டிரைவர் எச்சரித்ததால், பஸ்சில் பயணித்த 13 பேர் உயிர் தப்பினர்.
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலுார் வழியாக பொள்ளாச்சிக்கு, 13 பயணியருடன் தனியார் ஆம்னி ஏசி பஸ் நேற்று இரவு 9:30 மணிக்கு புறப்பட்டது.
பஸ் நுாறடி சாலை மேம்பாலத்தில் சென்ற போது, பஸ்சில் இருந்து புகை வந்துள்ளது. இதை, பஸ்சின் பின்னால் வந்த ஆட்டோ டிரைவர் கவனித்துள்ளார். உடனடியாக, பஸ்சை முந்தி சென்று, ஆட்டோவை குறுக்கே நிறுத்தி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பஸ்சை பாலத்தின் ஓரமாக டிரைவர் நிறுத்தினார். பயணியர் அனைவரும் இறங்க துவங்கினர். அப்போதே பஸ் தீபிடிக்க ஆரம்பித்தது.
இதனால், சில பயணியர் தங்கள் உடைமைகளை பஸ்சிலேயே விட்டுவிட்டு இறங்கி ஓடி உயிர் தப்பினர். சாலையில் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணிநேரத்திற்கு போல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுதும் எரிந்து சேதமானது.
இதனால், புதுச்சேரி நுாறடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.

