/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிலைய கட்டுமான பணி நேரு எம்.எல்.ஏ., புகார்
/
பஸ் நிலைய கட்டுமான பணி நேரு எம்.எல்.ஏ., புகார்
ADDED : நவ 12, 2024 07:59 AM
புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளையும் செய்து முடிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என நேரு எம்.எல்.ஏ., எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரியிடம், அளித்த புகார் மனு:
பதுச்சேரி புதிய பஸ் நிலையம் விரிவாக்கம் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக ரூ. 29 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்நிலையில், புதிய பஸ் நிலைய பணிகள் முடிவடைந்து, நகராட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரயுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, கழிவறைகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு, வணிக கடைகள், அலுவலகங்களுக்கு குடிநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பொதுமக்கள் அமர்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும் அறைகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தவில்லை.
தமிழகப்பகுதியான திண்டிவனம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடக்கும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை புதுச்சேரி அதிகாரிகள் சென்று பார்வையிட்டு, அங்குள்ள வசதிகளை அறிந்து, அதன்படி புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
இல்லையெனில், பஸ் நிலைய கட்டுமான பணியின் குறைகளையும், இதற்கு செலவழித்த பணத்தில் நடந்த ஊழல், முறைகேடுகளை வெளிப்படுத்தும் விதமாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

