/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வணிக திருவிழா பிப்., 28ம் தேதி வரை நீட்டிப்பு இதுவரை 27 லட்சம் பரிசு கூப்பன் விநியோகம்
/
வணிக திருவிழா பிப்., 28ம் தேதி வரை நீட்டிப்பு இதுவரை 27 லட்சம் பரிசு கூப்பன் விநியோகம்
வணிக திருவிழா பிப்., 28ம் தேதி வரை நீட்டிப்பு இதுவரை 27 லட்சம் பரிசு கூப்பன் விநியோகம்
வணிக திருவிழா பிப்., 28ம் தேதி வரை நீட்டிப்பு இதுவரை 27 லட்சம் பரிசு கூப்பன் விநியோகம்
ADDED : ஜன 20, 2025 06:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி வணிக திருவிழாவின் காலக்கெடு அடுத்த மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27 லட்சம் பரிசு கூப்பன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில், வணிக திருவிழா, 'புதுச்சேரி ஷாப்பிங் பெஸ்ட்டிவல்' என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்தி பரிசுகளை, வழங்கி வருகிறது.
இந்தாண்டிற்கான புதுச்சேரி வணிக திருவிழா கடந்த அக்டோபர் துவங்கி நடந்து வருகிறது.
வணிக திருவிழாவில் பங்கேற்றுள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி பிராந்தியத்தில் இதுவரை 18.50 லட்சம் பரிசு கூப்பன்களும், காரைக்காலில் 6.15 லட்சம் பரிசு கூப்பன்கள் உள்பட 27 லட்சம் பரிசு கூப்பன்களை பொதுமக்களுக்கு வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போட்டி போட்டிக்கொண்டு பரிசு கூப்பன்களுடன் பொருட்களை வாங்கி சென்று, அதிஷ்ட குலுக்கலுக்கான நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களின் கோரிக்கை ஏற்று வணிக திருவிழாவினை அடுத்த மாதம் 28ம் தேதி வரை புதுச்சேரி அரசு நீட்டிப்பு செய்துள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்தில் பரிசு பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
மாகி, ஏனாமில் விறுவிறு
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மட்டும் தான் விறுவிறுப்பாக வணிக திருவிழா நடந்து வருகிறது. மாகி, ஏனாமில் ஒரு பரிசு கூப்பன் கூட விநியோகம் செய்யப்படவில்லை.
அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த வணிக திருவிழாவில் பங்கேற்க ஆர்வம் இல்லாமல் இருந்தன.
இதற்கிடையில் மாகி, ஏனாமில் தற்போது வணிக திருவிழா களை கட்டியுள்ளது.
ஏனாமில் 1 லட்சம் பரிசு கூப்பன் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மாகியிலும் 1 லட்சம் பரிசு கூப்பன் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.