ADDED : ஜூலை 21, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :   புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரும், அரசு ஒப்பந்ததாரருமான சந்திரமோகன் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணையும் விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடந்தது.
அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்தராஜ் தலைமை தாங்கினார்.பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் முன்னிலையில் சந்திரமோகன் தனது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் பா.ஜ.,வில் இணைந்தார்.
இதில் செல்வம் எம்.எல்.ஏ., மாநில, மாவட்ட, தொகுதி, மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

