sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண்காணிப்பு வளையத்திற்குள் கால் சென்டர்கள் ; அதிரடியாக களம் இறங்கிய சைபர் கிரைம் போலீஸ்

/

கண்காணிப்பு வளையத்திற்குள் கால் சென்டர்கள் ; அதிரடியாக களம் இறங்கிய சைபர் கிரைம் போலீஸ்

கண்காணிப்பு வளையத்திற்குள் கால் சென்டர்கள் ; அதிரடியாக களம் இறங்கிய சைபர் கிரைம் போலீஸ்

கண்காணிப்பு வளையத்திற்குள் கால் சென்டர்கள் ; அதிரடியாக களம் இறங்கிய சைபர் கிரைம் போலீஸ்


ADDED : நவ 03, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலோ மேம்... ஹலோ சார்... நாங்கள் கால் சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்களிடம் 2 நிமிடம் பேசலாமா? என்ற அழைப்பு மொபைல்போன் வைத்திருக்கும் பலருக்கும் கண்டிப்பாக வந்திருக்கும். எதிர்முனையில் பேசுவது பெரும்பாலும் பெண் குரலாகத்தான் இருக்கும். நாங்கள் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் உங்களுக்கு கடன் வாங்கிக் கொடுக்கிறோம்.

பர்சனல் லோன் முதல் வீட்டுக் கடன் வரை ஈஸியா வாங்கலாம் என்று அந்தப் பெண் மூச்சுவிடாமல் தேன் ஒழுகும் குரலில் பேசி உங்களை அசர வைப்பர். அவசர தேவைக்காக நீங்கள், அவரிடம் லோன் குறித்து விவரம் கேட்டால் அதுதொடர்பான தகவல்களும் அடுத்த சில நிமிடங்களில் சொல்வதோடு வேலை, சம்பளம், குடும்பம் உள்ளிட்ட விவரங்களை அந்தப் பெண் சேகரித்திருப்பார்.

கால்சென்டர் பெண்ணின் காந்தக் குரல் பேச்சை நம்பி, லோன் வாங்க சம்மதித்தால், அவ்வளவு தான். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்த பணமும் காணாமல் போய்விடும். ஆனால், கடைசிவரை நீங்கள் கேட்ட லோன் கிடைக்கவே கிடைக்காது.

இப்படி புதுச்சேரியில் கால்சென்டர் போன் கால் அழைப்பு மூலம் பணத்தை இழந்தவர்கள், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனின் கதவை தட்டி புகார்கள் அளித்து கொண்டு இருக்க, உஷாரான சைபர் கிரைம் போலீசார், இப்போது புதுச்சேரியில் உள்ள கால்சென்டர்கள் அனைத்தையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

தற்போது புதுச்சேரியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் போலி கால் சென்டர்கள். இவற்றின் மூலம் பொதுமக்களை பணத்தாசை துாண்டில்போட்டு பணம் பறிக்கும் குற்ற செயல் அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி அரசின் தொழில் வணிக துறை பதிவேடுகளில் பதிவு பெற்ற கால் சென்டர்கள் 4 மட்டுமே உள்ளன. ஆனால் புதுச்சேரியில் ஏராளமான போலி கால் சென்டர்கள் அரசின் அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வருவதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே கால்சென்டர், பி.பி.ஓ.,க்களை முழுவதுமாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம்.

இந்த போலி கால் சென்டர்கள் மூலம் பொது மக்களை தொடர்பு கொண்டு சில தனியார் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை கூறி லோன் பெற்று தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி இன்சூரன்ஸ் காப்பீடு போட வைத்து ஏமாற்றுகின்றனர்.

இல்லையெனில், போலி கால் சென்டர்கள் மூலம் சில ட்ரஸ்ட் பெயர்களை கூறி நன்கொடை வசூல் செய்து பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது தவிர, போலி கால் சென்டர்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் திருமண வரன் பார்க்கும் தகவல் மையமாக செயல்பட்டு பொது மக்களை ஏமாற்றி வருகின்றன.

எனவே தான் புதுச்சேரியில் உள்ள போலி கால் சென்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருவதாக கூறினர்.






      Dinamalar
      Follow us