/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவு தொழிற்சாலைகளுக்கு அழைப்பு
/
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவு தொழிற்சாலைகளுக்கு அழைப்பு
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவு தொழிற்சாலைகளுக்கு அழைப்பு
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவு தொழிற்சாலைகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 08, 2025 02:14 AM
புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில், தகுதியான ஊழியர்களை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ.சி.,) புதுச்சேரி மண்டல இயக்குனர் செய்திக்குறிப்பு:
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் 196வது கார்ப்பரேஷன் கூட்டம், மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் உள்ள பதிவு செய்யப்படாத தகுதியான ஊழியர்களையும், பதிவு செய்ய ஊக்குவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் 2025 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இதன் மூலம், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களை இ.எஸ்.ஐ.சி., இணையதளம், ஷ்ரம் சுவிதா இணையதளம் மற்றும் எம்.சி.ஏ. இணையதளம் ஆகியவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம். முதலாளிகள் அறிவித்த தேதியிலிருந்து இ.எஸ்.ஐ.சி., சமூக பாதுகாப்புத் திட்டம் அமலுக்கு வரும். முந்தைய காலத்திற்கான பங்களிப்பு தொகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை,
அதற்குரிய அபராதமும் விதிக்கப்படாது. ஆய்வின் போது, முந்தைய காலத்திற்கான எந்த விதமான பதிவுகளோ அல்லது ஆவணங்களோ தாக்கல் செய்ய வேண்டியதில்லை. முந்தைய காலத்திற்கான எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், தங்களது தொழிற்சாலைகள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தகவலுக்கு அருகிலுள்ள இ.எஸ்.ஐ. கிளை அலுவலகம் அல்லது புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்டல அலுவகத்தை (0413- 2357642) தொடர்புகொள்ளலாம் அல்லது www.esic.gov.in இணையதளத்தை பார்வையிடவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.