தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஏனாமில் புயல் நிவாரணத்திற்கு ரூ.113 கோடி வழங்க வலியுறுத்தல்

ஏனாமில் புயல் நிவாரணத்திற்கு ரூ.113 கோடி வழங்க வலியுறுத்தல்

ஏனாமில் புயல் நிவாரணத்திற்கு ரூ.113 கோடி வழங்க வலியுறுத்தல்


UPDATED : நவ 16, 2026 08:16 PM

ADDED : நவ 16, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 08:16 PM ADDED : நவ 16, 2026 08:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அர்னாப் புயல் நிவாரணமாக 113 கோடி வழங்க வேண்டும் என மத்திய குழுத் தலைவர் சித்தரஞ்சன் தாஸை டெல்லியில் சந்தித்து புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தினார்.

ஏனாமில் ‘அர்னாப்’புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவின் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் ஏனாமில் ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து, புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் டெல்லியில் மத்திய குழுவின் தலைவரை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, அர்னாப் புயலால் ஏனாம் பிராந்தியத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஆலோசனை செய்தார்.

புயலால் விவசாயம், மின்சாரம், சாலைகள், குடியிருப்புகள், மீன்பிடித் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அவற்றைச் சீரமைக்கத் தேவையான நிதி உதவிகள் மேலும், புயல் சேதங்களைச் சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு 113 கோடி நிவாரணத் தொகையை ஒதுக்கீடு செய்து, விரைவில் வழங்க வேண்டும் அவர் வலியுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us