சீனியர் ஆடவருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
சீனியர் ஆடவருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
UPDATED : நவ 16, 2026 07:04 PM
ADDED : நவ 16, 2026 06:25 PM

புதுச்சேரி: சீனியர் ஆடவருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் நடத்தும் சீனியர் ஆண்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிது. இன்று (நவ.,16) சண்டிகர் நகரில் நடைபெற்ற போட்டியில் திரிபுரா அணியும், புதுச்சேரி அணியும் விளையாடியது. முதலில் விளையாடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் பானு ஆனந்த் 38 பந்துகளில் 59 ரன்களும், அமன் கான் 45 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து. புதுச்சேரி அணியின் அமன் கான், பாதல் ராவத், ஷஷாங்க் சிங் தலா 2 விக்கெட் எடுத்தனர். புதுச்சேரி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
69 ரன்கள் மற்றும் 2 விக்கெட் எடுத்த அமன் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று புதுச்சேரி அணி 8 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது.
