ADDED : ஜன 11, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: வடுவகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா, 38, கல்மண்டபத்தில் ஸ்டூடியோ வைத்துள்ளார். கடந்த 6ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு, சென்றார்.
மறுநாள் 7ம் தேதி வந்தபோது அவரது கடை பூடடு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கம்ப்யூட்டர், கேமிரா, 10 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து அவர், அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப் பதிந்து, ஸ்டூடியோவை உடைத்து, திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

