sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாணவர்களை கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள் ஆசிரியர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வேண்டுகேள்

/

 மாணவர்களை கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள் ஆசிரியர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வேண்டுகேள்

 மாணவர்களை கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள் ஆசிரியர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வேண்டுகேள்

 மாணவர்களை கேள்வி கேட்க ஊக்கப்படுத்துங்கள் ஆசிரியர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வேண்டுகேள்


ADDED : ஜன 11, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் உருவாவதில்லை. வகுப்பறையில் விதைக்கப் படுகின்றனர் என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில், நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது;

இங்கு நடைபெறுவதை கண்காட்சியாக பார்க்கவில்லை. இந்தியாவின் எதிர்கால அறிவியல் பயணத்தின் ஒரு அடையாளமாக பார்க்கிறேன். ஒரு காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை கடன் வாங்கிய இந்தியா, இன்று, உலகிற்கே அறிவியல் தீர்வுகளை தரும் நாடாக வளர்ந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பத்தில் இஸ்ரோ செய்து வரும் சாதனைகளை இன்று உலகம் வியப்பாக பார்க்கிறது. சாலை ஓர தள்ளு வண்டி கடை முதல் சர்வதேச கண்காணிப்பு பரிவர்த்தனை வரை எல்லா இடத்திலும் இந்தியாவின் யூபிஐ பரிவர்த்தனை முறை பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்தில் உலகமே அச்சத்தில் இருந்த போது இந்தியா அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்து உதவியது. அதனால் பல கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இவை எல்லாம் இந்தியாவின் அறிவியல் ஆளுமைக்கு உதாரணம்.

அறிவியல் என்பது பாட புத்தகத்தில் மட்டுமல்ல. அது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. ஏன்? எப்படி? எதனால்? என்று கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்கள். கேள்விகளில் இருந்துதான் விஞ்ஞானிகள் உருவாகிறார்கள்.

இன்று செயற்கை நுண்ணறிவு பற்றி எல்லாரும் பேசுகின்றனர். மருத்துவம், கல்வி, விவசாயம், பாதுகாப்பு என்று எல்லா துறையிலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்து விட்டது. செயற்கை நுண்ணறிவை பார்த்து பயப்பட தேவை இல்லை. அதை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அதை மனித நலனுக்காக பயன்படுத்த வேண்டும். ஏ.ஐ., மனிதனை மாற்ற வரவில்லை. மனிதனை வலுப்படுத்த வந்துள்ளது.

ஆசிரியர்கள்- மாணவர்களை கேள்வி கேட்க ஊக்கப் படுத்துங்கள். பாட புத்தகத்தை தாண்டி சிந்திக்க வழிகாட்டுங்கள். விஞ்ஞானிகள் ஆய்வு கூடத்தில் உருவாவதில்லை. வகுப்பறையில் தான் விதையாக விதைக்கப்படுகின்றனர். பின்னாளில், அறிவியல் சிந்தனையோடு, புதிய கண்டுபிடிப்போடு மரமாக வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us