/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் பஸ்களில் கேமரா எஸ்.பி., ரட்சனாசிங் 'அட்வைஸ்'
/
மாணவர் பஸ்களில் கேமரா எஸ்.பி., ரட்சனாசிங் 'அட்வைஸ்'
மாணவர் பஸ்களில் கேமரா எஸ்.பி., ரட்சனாசிங் 'அட்வைஸ்'
மாணவர் பஸ்களில் கேமரா எஸ்.பி., ரட்சனாசிங் 'அட்வைஸ்'
ADDED : ஜன 11, 2026 05:36 AM

புதுச்சேரி: மாணவர்கள் சிறப்பு பஸ்களில் கட்டாயம் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என, எஸ்.பி., ரட்சனாசிங் தெரிவித்தார்.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்காக, அரசு சார்பில், மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிராமங்களில் இருந்து நகருக்கு வரும் இந்த மாணவர்கள் பஸ்கள், அந்தந்த பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களை இறக்கி விட்டு, ஒட்டுமொத்தமாக நகர பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்படுகிறது.
இதனால் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையொட்டி, மாணவர்கள் சிறப்பு பஸ்களின் டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டம், கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் நாகராஜன் வரவேற்றார். போக்குவரத்து எஸ்.பி., ரட்சனாசிங் தலைமை தாங்கி, பேசியதாவது;
மாணவர்களை ஏற்றி வரும் அரசு சிறப்பு பஸ்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும், சில பஸ்கள் அதிவேகமாக செல்கிறது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, பஸ்களை சரியான வேகத்தில் இயக்க வேண்டும்.
ஒவ்வொரு பஸ்சிலும், சி.சி.டி.வி., கேமரா கட்டாயம் அமைக்க வேண்டும். மேலும், பஸ்சில் டிரைவர் மட்டுமே உள்ளார். கட்டாயம் கண்டக்டர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பஸ் உரிமையாளர், டிரைவர் மொபைல் எண்கள் பஸ்சில் எழுதப்பட்டு இருக்க வேண்டும். இவற்றை ஓரிரு நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்றார்.

