/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்டுடியோவில் ரூ.2 லட்சம் கேமராக்கள் திருட்டு
/
ஸ்டுடியோவில் ரூ.2 லட்சம் கேமராக்கள் திருட்டு
ADDED : நவ 16, 2025 11:10 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராக்களை திருடிச் சென்ற மர்ம நபர் களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் அன்பரசன் 38; காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவர், கடந்த 14ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் ஷட்டரில் உள்ள 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கண்ணாடி கதவும் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கேமராக்கள், 5 ஆயிரம் ரொக்கம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, தடங்களை சேகரித்தனர்.
இது குறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

