/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசாரம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
/
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசாரம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசாரம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசாரம்; இந்திய கம்யூ., அறிவிப்பு
ADDED : ஜன 25, 2024 04:45 AM
புதுச்சேரி : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை முதல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தப்படும் என, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்தியை ஆளும் பா.ஜ., அரசு இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது போல சித்தரித்து பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. வளர்ச்சி இல்லை. ஏழை மக்களுக்கு தரமான சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை எட்டாக்கனியாக உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியை பெஸ்டாக மாற்றுவோம் என ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்.,-பா.ஜ.,கூட்டணி தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அரசுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மருத்துவத்துறை சீர்கேடடைந்துள்ளது.
புதுச்சேரி மாநில மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ள மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விளக்கி காரைக்கால், மாகி உட்பட அனைத்து சட்டசபை தொகுதிகளில் நாளை முதல் பிப்., 8ம் தேதி வரை இந்திய கம்யூ., சார்பில் பிரசார பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.