/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பிற மாநிலத்தவர் போட்டியிட முடியுமா? பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி சமூகநீதி பேரவை கேள்வி
/
புதுச்சேரியில் பிற மாநிலத்தவர் போட்டியிட முடியுமா? பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி சமூகநீதி பேரவை கேள்வி
புதுச்சேரியில் பிற மாநிலத்தவர் போட்டியிட முடியுமா? பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி சமூகநீதி பேரவை கேள்வி
புதுச்சேரியில் பிற மாநிலத்தவர் போட்டியிட முடியுமா? பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டி சமூகநீதி பேரவை கேள்வி
ADDED : மார் 19, 2024 05:13 AM
புதுச்சேரி: பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தின் நகலை சுட்டிகாட்டி பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழ்நிலையில், ஓட்டுரிமை உள்ளவர் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் போட்டியிடலாம் என தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கவர்னர் தமிழிசை உள்பட பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என பேச்சு அடிபட்டது. அதையடுத்து சமூக நீதி பேரவைத் தலைவரான முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் சமூக அமைப்பினர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹரை சந்திந்து பேசினர்.
அப்போது புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல், சட்டசபை தேர்தல்,லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தலில் யார், யார் நிற்க வேண்டும் என்ற பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தின் நகல் கொடுக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் புதுச்சேரி விடுதலை அடைவதற்கு முன்னால் குறிப்பாக 1962ம் ஆண்டுக்கு முன்னதாக புதுச்சேரியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றவர்கள் மட்டும் தான் தேர்தலில் நிற்க முடியும் என்ற ஷரத்தை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவரை லோக்சபா தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பாலாபழனுார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் புதுச்சேரியில் போட்டியிட்டு வென்றுள்ளனர். நேற்றைய அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நன்னடத்தை விளக்க கூட்டத்தில் இந்த விவாதம் எழுந்தது.
அதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரிகள், இந்தியாவின் ஓட்டுரிமை உள்ள எந்த மாநிலத்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் போட்டியிடலாம். இது தேர்தல் விதிமுறையாக உள்ளது என்று பதிலளித்தனர்.
இருப்பினும் புதுச்சேரியில் பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தின் ஷரத் நகல் சுட்டிக்காட்டி மனு கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இவ்விவகாரத்தினை மாநில தேர்தல் துறை இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகரி குலோத்துங்கன் கூறும்போது, லோக்சபா தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை தெரிவித்தோம்.
பிற மாநிலங்களில் இருந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அது வேட்பு மனு பரிசீலனையின்போது தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

