ADDED : நவ 25, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் தட்டாஞ்சாவடி பகுதியில் சிமென்ட் வாய்க்கால் அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
ஒதியம்பட்டு வருவாய் கிராமம், வி.தட்டாஞ்சாவடி பகுதியில் செல்லும் ஆத்துவாய்க்காலை புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், ரூ. 39:11 லட்சம் மதிப்பில் சிமென்ட் வாய்க்காலாக மாற்றும் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் ஷியாம் பெபியன், கிராம முக்கியஸ்தர்கள் பழனி, தெய்வநாயகம், வீரக்கண்ணு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

