/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் சீரமைப்பு பணி: ஆணையர் ஆய்வு
/
வாய்க்கால் சீரமைப்பு பணி: ஆணையர் ஆய்வு
ADDED : மே 26, 2025 03:18 AM

திருக்கனுார் : திருக்கனுார் காந்தி நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கனுார் காந்தி நகர் மெயின் ரோடு வழியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், திருக்கனுார் பேட் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது.
இந்நிலையில், இச்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் சிலாப் சேதமடைந்துள்ளதால், அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் உத்தரவின் பேரில், காந்தி நகர் பகுதியில் சேதமடைந்த பழைய சிலாப்கள் அகற்றப்பட்டு, கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனா மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.