/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் வாய்க்கால் பணி துவக்கம்
/
முதலியார்பேட்டையில் வாய்க்கால் பணி துவக்கம்
ADDED : டிச 30, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி, வேல்ராம்பட்டில், 1 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீல், வாய்க்கால் அமைக்கும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார் .
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை நிதியின் கீழ், வாய்க்கால் அமைக்க 1 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, சம்பத் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ் உட்பட நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

