sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

/

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி


ADDED : பிப் 05, 2024 03:35 AM

Google News

ADDED : பிப் 05, 2024 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி சார்பில் தாண்டவமூர்த்திகுப்பம் கிராமத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சமூக மருத்துவத்துறை சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர். வித்யா மேற்பார்வையில் நடந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவ கல்லுாரி இயக்குனர் டாக்டர். ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தாண்டவமூர்த்திகுப்பம் கிராம முக்கிய வீதிகள் வழியாக மருத்துவ கல்லுாரியை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறியும் முறைகள், புற்றுநோய் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்லுாரி சமூக மருத்துவத்துறை தலைவர் டாக்டர். பரதலட்சுமி, பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us