ADDED : பிப் 16, 2025 02:57 AM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் சஸ்பெண்ட் உத்தரவை, எஸ்.பி.. ரத்து செய்து உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேந்தநாடு பகுதியை சேர்ந்த படையப்பா, 24; மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் தகராறு செய்து பிரச்னையில் ஈடுபட்டனர்.
அப்போது, படையப்பா சுவற்றில் தனக்குத்தானே தலையால் முட்டிக்கொண்டு பிரச்னை செய்ததால், பணியிலிருந்து போலீஸ்காரர் ஜெயச்சந்திரன், அவரை அடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
இந்த சமயத்தில் அங்கிருந்த இருந்த படையப் பாவின் பாட்டி சின்னபொண்ணு போலீஸ்காரரை தடுத்தார்.
அவர், நெட்டி தள்ளியதால் மூதாட்டி கீழே விழுந்தார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. அதை தொடர்ந்து, போலீஸ்காரர் ஜெயச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், படையப்பா தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டதோடு, ஜெயச்சந்திரன் எந்த குற்றமும் செய்யவில்லை என தெரிய வந்தது.
அதன்பேரில் போலீஸ்காரர் ஜெயச்சந்திரன் சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்து, மீண்டும் பணியில் சேர எஸ்.பி., உத்தரவிட்டார்.

