தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேட்பாளர்கள் விளம்பர வெளியிட முன் அனுமதி பெற உத்தரவு

 வேட்பாளர்கள் விளம்பர வெளியிட முன் அனுமதி பெற உத்தரவு

 வேட்பாளர்கள் விளம்பர வெளியிட முன் அனுமதி பெற உத்தரவு


ADDED : ஏப் 04, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் விளம்பரம் வெளியிட முன் அனுமதி பெற வேண்டும்.

மாட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. உச்ச நீதி மன்றம் உத்தரவுப்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், வானொலி, தனியார் எப்.எம்., திரையரங்குகள், பொது இடங்களில் வைக்கப்படும் ஆடியோ விஷ்வல் காட்சிகள், மின்னணு செய்தித்தாள்கள், சமூகவலை தளங்கள், இணையதளங்கள் மற்றும் மொத்த குறுஞ்செய்திகள் அல்லது குரல் செய்திகள் வாயிலாக வெளியிடப்படும். அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.

அச்சு ஊடகங்களை பொறுத்தவரை, வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து முன் சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இதற்காக, விளம்பரம் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ள தேதியிலிருந்து குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் காலத்தில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து விளம்பரங்களிலும் வெளியீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். எனவே, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us