ADDED : நவ 12, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டில்லி கார் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரியில் ஜே.சி.எம்., சார்பில், ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது.
டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷன் அருகில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜோஸ் மார்லஸ் மார்டின் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
புதுச்சேரி அண்ணா சாலையில் துவங்கிய ஊர்வலம் நேரு வீதி, புஸ்சி வீதி வழியாக ஜென்ம ராகினி கோவிலில் முடிவடைந்தது.

