ADDED : பிப் 05, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடந்து.
நெட்டப்பாக்கத்தில் பழமை வாய்ந்த பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிளக்கு வழிபாடு மணலிப்பட்டு சைவத்திருமடம் குமாரசாமி தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் நெட்டப்பாக்கம் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.