ADDED : ஜூலை 10, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சிரஞ்சீவி, வேல்முருகன் ஆகியோர் மணவெளி பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது சந்தேக நபர்கள் 4 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அதில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள 60 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் அவர்கள் மணவெளி சதீஷ், 21; அரியாங்குப்பம் அருள்ராஜ், 18; முகிலன், 18; மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், வைத்திக்குப்பத்தை சேர்ந்தவரிடம் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து. அவர்கள் வைத்திருந்த கஞ்சா மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
