தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைக்க முதல்வரிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு
தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைக்க முதல்வரிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு
ADDED : ஜூலை 10, 2026 01:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப் பது குறித்து, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன், வாழ்முனி, ஜவகர்லால், சரவணக்குமார் உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது அவரிடம் அளித்த மனு:
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண்களில் தளர்வு உள்ளது. பீகாரில், பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 45 சதவீதம், அனைத்து பிரிவு பெண்களுக்கும் 40 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண்ணாக உள்ளது.
அதேபோல், புதுச்சேரியிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தளர்வு அளிக்க வேண்டும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். எனவே, அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தகுதி மதிப் பெ ண்களில் தளர்வு தொடர் பாக மற்ற மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளின் நகல்களையும் முதல்வரிடம் ஆசிரியர்கள் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மு தல்வர் ரங்கசாமி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குசிதா பேகம், ஜோஸ்பின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
