பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மொஹித் கிங்ஸ் அணி தொடர் வெற்றி
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மொஹித் கிங்ஸ் அணி தொடர் வெற்றி
ADDED : ஜூலை 10, 2026 01:46 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வில்லியனுார் மொஹித் கிங்ஸ் அணி தொடர் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரீராம் கேபிடல் வழங்கும், பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மூன்றாவது சீசன் துத்திப்பட்டு சீகம் மைதானத்தில் துவங்கி நடந்து வருகிறது.
நேற்று நடந்த 4வது போட்டியில் வில்லியனுார் மொஹித் கிங்ஸ் அணியும், ரூபி ஒயிட் டவுன் லெஜெண்டஸ் அணியும் மோதியது.
டாஸ் வென்ற ரூபி ஒயிட் டவுன் லெஜெண்டஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய வில்லி யனுார் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பானு ஆனந்த் 9, சிவமுருகன் 4 ரன்களின் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு பொறுப்பாக ஆடிய ஆகாஷ் 23 பந்துகளில் 44 ரன்களும், கேப்டன் அமன்கான் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அணியினை கடைசி வரை கொண்டு சென்றனர்.
வில்லியனுார் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.
பின் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஒயிட் டவுன் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வில்லியனுார் அணியின் அலிம் ேஷக் 3 விக்கெட் எடுத்தார். இதன் மூலம் வில்லியனுார் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 60 ரன்கள் குவித்த அமன்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
