தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்தல் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : ஜூலை 10, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் மலட்டாற்று அருகில் மணலுடன் நின்று இருந்த இரு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது வடுக்குப்பம் மலட்டாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு இரு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவர்கள்மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பினர்.

இதையடுத்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டிகள் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us