/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
/
இ.சி.ஆரில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ADDED : மார் 29, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இ.சி.ஆரில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
இ.சி.ஆரில் மடுவுர்பேட்டை மெயின் ரோட்டில், நேற்று மாலை 4:30 மணியவில், டாடா இன்டிகா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது கார் இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தி, பேனட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள், தண்ணீர் எடுத்து வந்து காரின் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.
அதனை அடுத்து அங்கிருந்து காரை மற்றோரு கார் மூலம் கயிறு கட்டி இழுத்து சென்றனர். இச்சம்வத்தால் இ.சி.ஆரில் சிறிது நேரம் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது.