ADDED : டிச 31, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் அருகே கார் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் ஜி.என்.பாளையம் வெண்ணிசாமி நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் 46, கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவரது வீடு வங்கியில் அடமானத்தில் உள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் அவரது பெட்ரூமில் உள்ள மின்விசிறி கொக்கியில் மனைவியின் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.