/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் திரிந்த மாடுகளால் கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து
/
சாலையில் திரிந்த மாடுகளால் கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து
சாலையில் திரிந்த மாடுகளால் கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து
சாலையில் திரிந்த மாடுகளால் கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து
ADDED : டிச 01, 2025 05:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் திரிந்த மாடுகளால் வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மதன். இவர், புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள உறவினர் ராகுல் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் நேற்றிரவு 11:00 மணியளவில் காரில் வந்தார். அப்போது வெங்கடேஸ்வரா நகர், 45 அடிசாலை சந்திப்பு அருகே மதன் காரை திருப்பு முயன்றபோது, சாலையில் சுற்றித் திரிந்த மாடு திடீரென காருக்கு குறுக்கே வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மதன் மாடு மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, கட்டுபாட்டை இழந்த கார் அருகில் இருந்த பெரிய வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தம், கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து, காரில் இருந்த மதன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டனர்.
இதில், அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் விழுந்த காரை மீட்டனர்.

