/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருதய வளர்சிதை மாற்ற சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்
/
இருதய வளர்சிதை மாற்ற சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்
இருதய வளர்சிதை மாற்ற சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்
இருதய வளர்சிதை மாற்ற சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்
ADDED : ஆக 02, 2025 07:18 AM

பாகூர் : விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், மேம்பட்ட இருதய வளர்சிதை மாற்ற சிறப்பு சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கத்தில் உள்ள விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற நிலையான நோய்களை கையாளும் முறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும், ஒருங்கிணைந்த முயற்சியாக, புதுச்சேரி மேம்பட்ட இருதய வளர்சிதை மாற்ற சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி சுகாதார துறை இயக்குனர் செவ்வேள் இம்மையத்தை துவ க்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் வெஸ்ட் வர்ஜினியா மாநிலத்தில் உள்ள சார்ல்சன் மருத்துவ மையத்தின் இருதய சிறப்பு நிபுணர் ஆனந்த் சொக்கலிங்கம், சென்னை டயாபடிஸ் கேர் டாக்டர் ரவி, வி நாயகா மிஷன் மருத்துவ அறிவியல் நிறுவன இதயவியல் பிரிவு டாக்டர் சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மருத்துவமனை மரபணு நிபுணர் செல்வம், விநாயகா மிஷன் ரிசார்ட் பவுண்டேஷன் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல், ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி டீன் மணி, ஆராய்ச்சி பிரிவு டீன் ராகேஷ் சேகல், மருத்துவ கண்காணிப்பாளர் தாமோதரன், டாக்டர் வித்யாவதி, இயக்குனர் அரிமேனன், தலைமை இயக்க அதிகாரி மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.