/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு சிறைக்குள் வெளிநபர் மூலம் கஞ்சா சப்ளை மூன்று சிறை கைதிகள் உட்பட 4 பேர் மீது வழக்கு

ADDED : நவ 09, 2024 06:29 AM
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் வெளிநபர் மூலம் கஞ்சா பார்சல் கொண்டு வந்த சம்பவத்தில், சிறை கைதிகள் மூவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை காண வரும் உறவினர்களை சோதித்து உள்ளே அனுப்பும் பணி ஐ.ஆர்.பி.என்., மூலம் நடந்து வந்தது. தற்போது ஐ.ஆர்.பி.என்., திரும்ப பெற்றப்பட்டனர். குறைவான எண்ணிக்கையில் உள்ள சிறை காவலர்களே, சிறை கைதிகளை காண வரும் உறவினர்களை சோதித்து அனுப்புகின்றனர். இதனை அறிந்த காலாப்பட்டு சிறையில் உள்ள விசாரணை கைதி ராம்குமார் கஞ்சா கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.
தனது நண்பரான விசாரணை கைதி அஜய் காண வரும், ஜிப்மர் குடியிருப்பைச் சேர்ந்த ரூபன் என்பவர் மூலம் சிறை வளாகத்திற்குள் கஞ்சா கொண்டுவர ஏற்பாடு செய்தார். ரூபன் கொண்டு வந்த கஞ்சா பார்சல் மதில் சுவர் அருகே வைக்கப்பட்டு இருந்தது. பார்சலை சிறை கைதி ராஜ்குமார் சிறைக்குள் சென்றபோது, சிறை காவலர்கள் சோதனையில் சிக்கினார்.
விசாரணையில், கைதி ராம்குமார் அறிவுறுத்தல்படி, ரூபன் மூலம் கொண்டு வந்த 166 கிராம் கஞ்சாவை, ராம்குமார் கொண்டு வந்தபோது சிக்கியது தெரியவந்தது. கஞ்சா கொண்டுவர கைதி ராம்குமார், சிறைக்குள் பயன்படுத்திய மொபைல்போனையும் சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சிறை கைதிகள் ராம்குமார், ராஜ்குமார், அஜய் மற்றும் கோரிமேடு ரூபன் ஆகியோர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.