/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்கா பொருட்கள் விற்பனை 7 பேர் மீது வழக்கு
/
குட்கா பொருட்கள் விற்பனை 7 பேர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : போதை ப்பொருட்களை விற்பனை செய்த, 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி நகரப் பகுதி களில் தடை செய்யப்பட்ட குட்கா, கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் சோதனை நடத் தினர். அதில், ரூ.8,500 மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியது.
இதுதொடர்பாக சேதராப்பட்டு ஆதிமூலம்; ஒடிசா ஜய்பால்; கோபாலன் கடை பரமேஸ்வரி; ரெட்டியார் பாளையம் பாக்கியநாதன்; கொஞ்சிமங்கலம் குணசேகரன், தர்மாபுரி கிருஷ்ணமூர்த்தி; நெல்லித்தோப்புசாரலத்மேரி ஆகிய 7 பேர்மீது, போலீசார் வழக்கு பதிந்துவிசாரித்து வருகின்றனர்.