/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோஷ்டி மோதல் 8 பேர் மீது வழக்கு
/
கோஷ்டி மோதல் 8 பேர் மீது வழக்கு
ADDED : மார் 12, 2024 11:15 PM
புதுச்சேரி, பூமியான்பேட்டையில் இரு தரப்பினரிடை ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
புதுச்சேரி பூமியான்பேட்டை பாவாணர் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி, 36; இவரும், சவுந்தர் என்பவரும் அதே பகுதியில் நேற்று மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன், குரு, கார்த்தி, ராஜேஷ் ஆகியோர், தமிழ்மணியை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதையடுத்து, தமிழ்மணி ஆதரவாளர்களான சவுந்தர், சந்துரு, பாபு ஆகியோர் சேர்ந்து, ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, தமிழ்மணி மற்றோரு தரப்பை சேர்ந்த ராஜேஷ் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, தமிழ்மணி, ராஜேஷ் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

