நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்திரையர்பாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 38; இவர் குருமாம்பேட் சுபாஷ் சந்திர போஸ் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இடம் வாங்கினார்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த முருகையன் உட்பட 9 பேர் சேர்ந்து இடத்தை அபகரித்துள்ளனர். அதை தட்டி கேட்ட இடத்தின் உரிமையாளர் பிரகாஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பிரகாஷ் புதுச்சேரி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில், முருகையன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.