/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் முன்னெச்சரிக்கை 90 பேர் மீது வழக்கு
/
தேர்தல் முன்னெச்சரிக்கை 90 பேர் மீது வழக்கு
ADDED : மார் 20, 2024 05:18 AM
புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 90 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பொது இடத்தில் கலவரம் மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 107 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர்.
இரண்டு நாட்களில் மொத்தம் 90 பேர் மீது வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று உறுதிமொழி பத்திரத்தில், தங்களால் எவ்வித பிரச்னைகள் வராது என, தெரிவிக்க வேண்டும்.

