ADDED : ஏப் 18, 2025 04:07 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக காங்., நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதை கண்டித்து புதுச்சேரி மாநில காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகே நடந்தது.
மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவப் பொம்பையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக, உருளையன்பேட்டை போலீசார் காங்., நிர்வாகிகள் சார்லஸ், சூசை, வேல்முருகன், ராஜா மற்றும் சிலர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

