/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுதி மேலாளர் மீது வழக்கு தப்பியோடிய 4 பேருக்கு வலை
/
விடுதி மேலாளர் மீது வழக்கு தப்பியோடிய 4 பேருக்கு வலை
விடுதி மேலாளர் மீது வழக்கு தப்பியோடிய 4 பேருக்கு வலை
விடுதி மேலாளர் மீது வழக்கு தப்பியோடிய 4 பேருக்கு வலை
ADDED : அக் 24, 2024 05:53 AM
அரியாங்குப்பம்: சூதாட்டம் விளையாட ரூம் கொடுத்த, விடுதி மேலாளர் மீது வழக்குப் பதிந்து, தப்பியோடி 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பம் அடுத்த மணவெளி தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக, அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அந்த விடுதியில் நேற்று சோதனை நடத்தினர். போலீசார் வருவதை கண்ட சூதாட்டம் விளையாடிவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
சூதாட்டம் விளையாட ரூம் கொடுத்த, விடுதி மேலாளர் மணிமுரசு, 23; மீது போலீசார் வழக்கு பதிந்து,விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடி 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.