/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் மருத்துவ மாணவர்கள் மீது வழக்கு
/
டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் மருத்துவ மாணவர்கள் மீது வழக்கு
டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் மருத்துவ மாணவர்கள் மீது வழக்கு
டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் மருத்துவ மாணவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 30, 2024 05:29 AM
பாகூர்: டெலிவரி ஊழியரை தாக்கிய, மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்துள்ள அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் 29; கொரியர் நிறுவன ஊழியர். இவர், கடந்த 23ம் தேதி, கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரி விடுதியில் தங்கி மருத்துவம் படித்து வரும் அர்ஷத்பாஷா என்பவருக்கு வந்திருந்த கொரியரில் வந்த பார்சலை டெலிவரி செய்ய சென்றுள்ளார். ராஜேஷ் மொபைல் எண் மூலமாக , அவரை தொடர்பு கொண்ட போது, அவர், தான் கல்லுாரிக்கு சென்று விட்டதாகவும், பார்சலை செக்கியூரிட்டியிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள், ஜீ பே மூலமாக பணம் செலுத்துவதாக கூறி உள்ளார்.
ராஜேஷ் பார்சலை செக்கியூரிட்டியிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பணம் வராததால், ராஜேஷ் மருத்துவ கல்லுாரி ஹாஸ்டலுக்கு சென்று அர்ஷத் பாஷாவிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு, அவர் பொருள் மாறி வந்துள்ளதால் பணம் தர முடியாது என்றார். பார்சலை பிரித்த பிறகு எங்களால் ஆர்டர் ரிட்டர்ன் எடுக்க முடியாது, வெப்சைட்டில் ரிட்டன் பண்ணுமாறு ராஜேஷ் கூறினார். அதை ஏற்க மறுத்த அர்ஷத் பாஷா, தனது நண்பர் அஜ்மீர் முஸ்தபாவுடன் சேர்ந்து, ராஜேஷை தகாத வார்த்தையில் திட்டி தாக்கினார். இதில், படுகாயமடைந்த ராஜேஷ் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் அர்ஷத் பாஷா, அஜ்மீர் முஸ்தபா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

