ADDED : ஜன 23, 2025 05:11 AM
புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் பேனர் வைத்த மர்மநபர் மீது வழங்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, மறைமலை அடிகள் சாலை முதல் இந்திராகாந்தி சிலை வரையில் சுமை துாக்கும் தொழிலாளி சங்கம் சார்பில் பேனர்கள் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், டிஜிட்டல் பேனர் வைத்த சுமை துாக்கும் தொழிலாளி சங்க தலைவர் மதன், மகேந்திரன் ஆகியோர் மீது ஒதியஞ்சாலை மற்றும் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பிள்ளைச்சாவடி - காலாப்பட்டு இ.சி.ஆர். மெயின் ரோட்டில் பேனர் வைத்திருந்த பிள்ளைச்சாவடியை சேர்ந்த ஜெயசங்கர் மீது, பொதுப்பணித்துறை தேசிய நெடுங்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார், வழக்குப் பதிந்தனர்.