ADDED : ஜூலை 31, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் பைபாஸ் உட்பட பல இடங்களில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, வில்லியனுார் பைபாஸ், கூடப்பாக்கம் சாலை, தொண்டமாநத்தம் - சேதராப்பட்டு சாலையின் இருபுறம், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், திருமண பேனர்கள், அரசியல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதையடுத்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

