/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு
/
தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : அக் 21, 2024 05:56 AM
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன், 42; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 18ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.அன்று இரவு மங்கலம் சாராயக்கடை அருகே தேவநாதன் பலத்த காயத்துடன் கிடப்பதாக அவரது மனைவி மனோரஞ்சிதாவிற்குதகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்று தேவநாதனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்த தேவநாதன்,மங்கலம் சாராயக்கடை அருகே நின்றிருந்தபோது செம்பியர்பாளையத்தை சேர்ந்த சங்கர், நாராயணன் மற்றும் மங்கலம் ராமச்சந்திரன் ஆகியோர் தன்னிடம் பணம் கேட்டனர். இல்லை என, கூறியதால்சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறினார்.
புகாரின் பேரில், சங்கர் உட்பட மூவர் மீதும் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.