/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட் முன்பு ஆர்ப்பாட்டம் 14 பெண்கள் மீது வழக்கு
/
கோர்ட் முன்பு ஆர்ப்பாட்டம் 14 பெண்கள் மீது வழக்கு
ADDED : மார் 29, 2025 03:59 AM
புதுச்சேரி: போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 14 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தளக்குப்பம் தானாம்பாளையம் செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்த சிறுமிக்கு, பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஆசிரியர் மணிகண்டன், 25, சரமாரியாக தாக்கி, பள்ளியை சூறையாடி பொருட்களை சேதப்படுத்தினர்.
தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரியர் மணிகண்டனை போக்சோ வழக்கில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் மணிகண்டனுக்கு, ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி கோர்ட் முன்பு, கடந்த 25ம் தேதி, ஆர்ப்பாட்டம் செய்தனர். அனுமதியின்றி, கோர்ட் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து உருளையன்பேட்டை போலீசார், 14 பெண்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.