/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட் சென்று வந்த கைதியிடம் மொபைல் போன் பேட்டரிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

ADDED : டிச 22, 2024 06:53 AM
காரைக்கால்,: சிறைக்குள் கைதி கொண்டு வந்த மொபைல் போன் பேட்டரிகளை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கைதி உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாரைச் சேர்ந் தவர் நந்தகுமார், 30; ஆயுதங்களுடன் திரிந்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரை நேற்று முன்தினம் வேறு வழக்கு விசாரணைக்காக காரைக்கால் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கு விசாரணை முடிந்த பின் மாலை மீண்டும் அவரை காரைக்கால் கிளை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அவரை சிறைக்காவலர்கள் சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் இரு மொபைல் போன் பேட்டரிகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நீதிமன்றத்திற்கு சென்ற நந்தகுமார் கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அங்கு கழிவறை ஜன்னலில் அவரது நண்பர் அப்துல்ரகுமான் வைத்திருந்த 2 மொபைல் பேட்டரிகளை பதுக்கி எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கைதி நந்தகுமார், அவரது நண்பர் அப்துல் ரகுமான் ஆகியோர் மீது காரைக்கால் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.