/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி காதலி வீட்டில் புகுந்து தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
/
மாஜி காதலி வீட்டில் புகுந்து தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
மாஜி காதலி வீட்டில் புகுந்து தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
மாஜி காதலி வீட்டில் புகுந்து தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 28, 2025 01:51 AM
புதுச்சேரி: முன்னாள் காதலி வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய மூன்று வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது பெண்.  இவர் வில்லியனுார் திருக்காமேஸ்வரர் நகரைச் சேர்ந்த முகிலன், 28;  என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்த வந்துள்ளனர்.
இந்நிலையில் முகிலன், காதலி மீது சந்தேகப்பட்டு பேசியுள்ளார். இதனால் அப்பெண்  முகிலுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதில்  ஆத்திரமடைந்த முகிலன், தனது நண்பர்களான காணுவாபேட் புதுநகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் 28, அந்தோணி 27, ஆகியோருடன் சேர்ந்து  நேற்று முன்தினம் மாலை பெண்ணின்  வீட்டிற்குள்  அத்துமீறி நுழைந்து அவரை தாக்கிவிட்டு  சென்றனர்.
புகாரின் பேரில்  வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.