/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி அதிகாரிகளை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
/
நகராட்சி அதிகாரிகளை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 22, 2026 05:26 AM
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உழவர்கரை நகராட்சி சார்பில், கதிர்காமம் தொகுதியில், சாலை ஓரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மூலம் சீனிவாசபுரம் சாலையோர வாய்க்கால் மீது சிறு கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சண்முகபுரம் அண்ணா வீதி முதல் குறுக்கு தெருவை சேர்ந்த மணிமாறன் மற்றும் மூன்று பேர், கடைகள் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, வேலை செய்யாமல் தடுத்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் அளித்த புகாரின் பேரில், மணிமாறன் உள்ளிட்ட நான்கு பேர் மீது மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

