ADDED : ஜன 22, 2026 05:27 AM

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் பஞ்சாயத்து மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது.
ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலம் கரிக்கலாம்பாக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கரிக்கலாம்பாக்கம் பகுதிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்து பெண்கள் உறுதிமொழி எடுத்தனர்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
ஏற்பாடுகளை கிராம சேவக் சத்யா, சமூக வல்லுனர்கள் விஜியலட்சுமி, தவமணி, கணக்காளர் கலையரசி, ஜென்டர் சி.ஆர்.பி., மலர்கொடி, பஞ்சாயத்து தலைவர் மீரா, செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

