/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடையை மீறி படகு இயக்கிய நிறுவனத்தின் மீது வழக்கு
/
தடையை மீறி படகு இயக்கிய நிறுவனத்தின் மீது வழக்கு
தடையை மீறி படகு இயக்கிய நிறுவனத்தின் மீது வழக்கு
தடையை மீறி படகு இயக்கிய நிறுவனத்தின் மீது வழக்கு
ADDED : நவ 18, 2025 05:48 AM
புதுச்சேரி: தடையை மீறி சுற்றுலா பயணிகளை கடலுக்கு அழைத்து சென்ற தனியார் படகு நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், வானிலை மையம் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, சுற்றுலா படகுகளை இயக்க வேண்டாம் என சுற்றுலாத்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், பழைய துறைமுகம் பகுதி வழியாக கடலுக்கு படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் விசாரித்ததில், சீகல்ஸ் குரூஸ் என்ற படகு மூலம், 62 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது.
வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற, தனியார் கோவிந்த் வாட்டர் அட்வென்ச்சர் என்ற தனியார் நிறுவனத்தின் மீது, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

