/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிபோதையில் இடையூறு: மூவர் கைது
/
குடிபோதையில் இடையூறு: மூவர் கைது
ADDED : நவ 18, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் நெடுங்காடு நல்லாத்துார் மேலபடுகை சாலையில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய நபரை ரோந்து பணியில் இருந்த துணை உதவி ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் நல்லடை பகுதியை சேர்ந்த சுந்தர், 44; எனத் தெரியவந்தது. இவர் மீது நெடுங் காடு போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதேபோல் குடிபோதையில் ஆபாசமாக பேசியதாக திருவாரூர் நன்னிலம் பகுதியை சேர்ந்த தேவா,21; மற்றும் கனிஷ்கரன், 20;ஆகிய இருவர் மீது நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

